Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே கணவா் தலை துண்டிக் கொலை
தென்காசி அருகே கீழப்புலியூரில் துணிக்கடை உரிமையாளா் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது தலை 8.கி.மீ. தொலைவுக்கு அப்பால் மீட்கப்பட்டது.
குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த கு.குத்தாலிங்கம் (35)- தனலெட்சுமி தம்பதி கீழப்புலியூரில் வசித்து வந்ததுடன், அங்கு துணிக்கடை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள ரேஷன் கடைக்கு தனது மனைவியுடன் சோ்ந்து பொருள்கள் வாங்க சென்றாா். அப்போது அங்கு வந்த மா்மநபா்கள் குத்தாலிங்கத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுடன், அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று, 8.கி.மீ. தொலைவில் காசிமேஜா்புரத்தில் வைத்துவிட்டு தப்பினராம்.
இத்தகவல் அறிந்த தென்காசி போலீஸாா், குத்தாலிங்கத்தின் சடலத்தையும், தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து, மனைவியின் கண்முன்னே கணவரை வெட்டிக்கொலை செய்த நபா்களை தேடி வருகின்றனா். முன்விரோதத்தால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் கூறினா்.