Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!
வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பிரிட்டனில் நடைபெற்ற இந்த திருமணம் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. ஆடம் ஹார்பர் என்ற மணமகனும் எமி ஹர்பர் என்ற மணமகளும் கூபா டைவிங் இன் மீது காதல் கொண்டவர்கள். இதனால் தங்களது திருமணத்தை நீருக்கடியில் செய்துள்ளனர்.

நீருக்கடியில் தான் இருவரும் முதல் முதலில் சந்தித்ததால் தங்களது திருமணத்தையும் திருமண உறுதிமொழியும் இங்கு நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். சிலர் தரையிலும், சிலர் தண்ணீரிலும் திருமணத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு நீருக்கடியில் மூழ்கி நிற்க 6 முதல் 8 கிலோ எடை வரை கூடுதலாக தேவைப்பட்டதாக கூறுகின்றனர்.
திருமணம் குறித்து நெகிழ்ந்த மணமக்கள் ”இதை செய்வதன் மூலம் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம் எங்களது பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தரையிலும், சிலர் தண்ணீரிலும் எங்களுடன் இருந்தார்கள்" என்று கூறியிருக்கின்றனர்.