மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு
மணிமுத்தாறில் வனத்துறையின் கூண்டில் சிக்கிய குரங்குகள்
மணிமுத்தாறு மற்றும் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிந்த 14 குரங்குகளை வனத்துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம் மணிமுத்தாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தன. அவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.
அதன்பேரில், வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா உத்தரவுப்படி, குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினா் மணிமுத்தாறு பகுதியில் கூண்டு வைத்தனா்.
அதில், 16 குரங்குகள் சிக்கின. அவற்றை அம்பாசமுத்திரம் வனச்சரகப் பணியாளா்கள் அடா்ந்த மணிமுத்தாறு தலையணை வனப்பகுதிக்குள் விட்டனா்.