ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம...
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள்: 63
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Executive
காலியிடங்கள்: 63
1. Mechanical - 11
2. Electrical - 17
3. Instrumentation - 6
4. Chemical - 1
5. Fire & Safety - 28
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மின் பொறியியல், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல், தீ மற்றும் பாதுகாப்பு பொறியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
சென்னை ஐஐடியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினிவழித் தேர்வு, திறன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,180. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com.careers current openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2025