Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும் தெரியுமா?
பலரின் விருப்பமான சுற்றுலா இடம் என்றால் அது கடற்கரை தான். அலை ஓசையிலும் ஒரு விதமான அமைதியை இங்கு அனுபவிக்க முடியும். 30 நிமிடங்கள் மட்டும் தோன்றும் கடற்கரை, கருப்பு மணலை கொண்ட கடற்கரைகள் என பல தனித்துவமான கடற்கரைகள் உள்ளன.
அந்த வகையில் சிவப்பு மணலை கொண்ட அரிய வகை கடற்கரை குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
இங்கிலாந்தின் தெற்கு டெவோனில் அமைந்துள்ள பிராட்ஸாண்ட்ஸ் கடற்கரை சிவப்பு மணல்களால் காணப்படுகிறது. இந்த கடற்கரை அதன் தனித்துவமான அழகு மற்றும் அமைதி சூழலுக்கு பெயர் பெற்றது.

சிவப்பு கடற்கரையின் நிறம், பெரும்பாலும் மணலில் காணப்படும் இரும்பு ஆக்சைட்டின் அதிக அளவினால் ஏற்படுகிறது. சில சமயங்களில், கடற்பாசிகள் முளைத்து கோடைக்காலத்தில் சிவப்பு நிறமாக மாறுவதால், கடற்கரை சிவப்பு நிறத்தை பெறுகிறது.
இந்த கடற்கரை ப்ளூ ஃபிளாக் அந்தஸ்தை பெற்றுள்ளது. அதன் தூய்மை, பாதுகாப்பு, தனித்துவமான அம்சங்களுக்காக இந்த அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்த இடம் மற்ற கடற்கரைகளை போல் இல்லாமல் அதன் அமைதியான, அழகான சூழலுடன், சிவப்பு மணலுக்கும் புகழ்பெற்றுள்ளது.
இந்த கடற்கரை பறவை ஆர்வலர்கள், கடல்வாழ் உயிரின ஆர்வலர்களுக்கு ஒரு புகலிடமாக உள்ளது. இங்கு அழகான பறவைகள், டால்பின்கள் பல்வேறு வகையான மீன்களை காணலாம். இந்த சொர்க்கமான இடத்தை அடைய சில சவால்கள் உள்ளன. உயரமான மற்றும் தாழ்வான பாறைகள் வழியாக இந்த கடற்கரையை அடைய வேண்டும்.