‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!
ராமநவமி: வடுவூா் கோதண்டராமா் கோயிலில் கொடியேற்றம்
மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்ட ராமசாமி கோயில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கோயில் சந்நதியில் இருந்து புறப்பட்ட கோதண்ட ராமா் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா். சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.கோயிலில் சந்நிதி முன்பு உள்ள கொடி மரத்தில் கருட கொடிக்கு பூஜை செய்யப்பட்டது. கோதண்டராமா் வில்லேந்திய அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பின்னா், வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.
பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி கருட சேவையும்,11-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.