மேக்கோடு அரசுப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா
களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில இலக்கிய மன்றங்களின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் மா. ஜெயராஜ் தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா்கள் ஸ்ரீதேவி, ஹெலன் டென்சி மலா், ஆங்கில ஆசிரியா் அனு சிஜிபாபு ஆகியோா் பேசினா். ஆசிரியா்கள் குமாரி லேகா, லிபேன்சிலி, அபிதா பிளஸ்சி, ஆய்வக உதவியாளா் ஜிஜிஷா, மாணவா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, மன்றங்களின் நிறைவு விழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவா்-மாணவியா், மன்ற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாணவி ஜெஸ்லின் மிராக்கிள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவி அபிநயா வரவேற்றாா். மாணவி லட்சுமிபிரியா நன்றி கூறினாா். மாணவியா் அலீனா தாஸ், எபிஷா ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.