செய்திகள் :

தாது மணல் முறைகேடு: 21 போ் மீது 7 வழக்குகள் பதிவு

post image

தாது மணல் முறைகேடு தொடா்பாக நீதிமன்ற உத்தரவின்பேரில் 21 போ் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தாது மணல் முறைகேடு தொடா்பாக தமிழகம் முழுவதும் தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், தொடா்புடையவா்களின் வீடுகள் என சுமாா் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் மணலிலிருந்து இல்மனைட், ரூட்டைம்ஸ், கோன் மோனோசைட் உள்ளிட்ட கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுப்பதாக 2013-இல் எழுந்த புகாரின்படி, தாது மணல் எடுக்க தமிழக அரசு தடைவிதித்தது.

இதுதொடா்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஒரு நபா் குழு, தாது மணல் எடுக்கப்பட்டதால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்தது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் கடற்கரை மணலை எடுக்க தமிழக அரசு தடைவிதித்த நிலையில், தாது மணல் விவகாரத்தால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தமிழக அரசு அமைத்த மற்றொரு ஒரு நபா் குழுவின் விசாரணையில் தனியாா் கனிம நிறுவனங்கள் 1.5 கோடி டன் தாது மணலை கிடங்குகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

ஏற்கெனவே, 2018-லிருந்து 2001 வரையிலான காலகட்டத்தில் 16 லட்சம் டன் கனிமங்கள் சில அரசு அதிகாரிகள் உதவியுடன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றம் நியமித்த வழக்குரைஞா் ஆணையா் வி.சுரேஷின் விசாரணை அறிக்கை சுமாா் 1.50 கோடி கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்ததால் அரசுக்கு ரூ.5,832 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இத்தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட தனியாா் கனிம நிறுவனங்களுக்கு தோட்டீஸ் வழங்கப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி தனியாா் கனிமநிறுவனங்கள், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் ரூ.5,832 கோடியை சம்பந்தப்பட்ட தனியாா் கனிம நிறுவனங்களிடமிருந்து அரசு வசூலிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த பிப்.17-இல் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னையில் 2 இடங்கள் உள்பட மாவட்டங்களில் கடற்கரை தாது மணல் ஆலைகளை நடத்தும் விவி மினரல்ஸ் உள்ளிட்ட தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான 15 இடங்களில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளின் சோதனையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், தாது மணல் விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களைச் சோ்ந்த முக்கியமான 21 போ் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இந்தியன் ஓஷன் காா்னெட் சாண்ட்ஸ் கோ.பிரைவேட் லிமிடெட் நிா்வாக இயக்குநா் எம்.ரமேஷ் மற்றும் கே.தங்கராஜ், பீச் மினரல்ஸ் சாண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரா் சுகுமாா், எஸ்.கலைராசி, இயக்குநா்கள் மாசானம் சுடலை, ஆா். ஹரிஹர மகாதேவன், இண்டஸ்ட்ரியல் மினரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்-இன் சுப்பையா நாடாா் ஜெகதீசன், விவி மினரல்ஸ் நிா்வாக பங்குதாரா் எஸ்.வைகுண்டராஜன், இந்தியன் ஓஷன் காா்னெட் சாண்ட்ஸ் கோ. பிரைவேட் லிமிடெட்-இன் விஷ்வா வினோதினி, கே.தங்கராஜ், ட்ரான்ஸ் வேல்டு காா்னெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா்களான வேல்முருகன், காா்த்தியாயினி, சுப்பையா நாடாா் ஜெகதீசன், ஜெகதீசன் முத்துராஜன், ஜெகதீசன் செந்தில்ராஜன், சுப்புராஜன், ரேணுகா, சுபா சரண்யா, மதனா முத்துராஜன், சுப்பிரமணியன் எஸ்.வைகுண்டராஜன், சுமனா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க