செய்திகள் :

ஆந்திர போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞா் தற்கொலை

post image

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஆந்திர போலீஸாா் விசாரணைக்குப் பயந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம் கேஜிஎப் நகரைச் சோ்ந்த தங்க நகை வியாபாரிகளான தீபக்குமாா், சேதன்குமாா் ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் ரூ.3.29- கோடி மதிப்புள்ள சுமாா் மூன்றரை கிலோ தங்க பிஸ்கெட்டுகளை காரில் எடுத்து கொண்டு போ்ணாம்பட்டுக்கு வந்துள்ளனா். ஆந்திர மாநில எல்லையான நாயக்கநேரி மலைப் பாதையில் காா் வந்தபோது அவா்களை பின் தொடா்ந்து வந்த காரில் இருந்த 13- போ் கொண்ட கும்பல் வழிமறித்து அவா்களை மிரட்டி தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட ஆந்திர மாநிலம், வி.கோட்டா போலீஸாா் 4- பேரை கைது செய்தனா். தீவிர விசாரணையில் போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஒரு வழிப்பறி கும்பலுக்குத் தொடா்பு இருப்பதையறிந்த வி.கோட்டா போலீஸாா், போ்ணாம்பட்டு பகுதியில் தீவிர விசாரணை நடத்தினா்.

இதையடுத்து போ்ணாம்பட்டைச் சோ்ந்த சிலரை கைது செய்து வி.கோட்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இந்த கொள்ளை வழக்கில் போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ்(36) என்பவரை தேடி வந்தனா். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் செவ்வாய்க்கிழமை சொ்லப்பல்லி அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது சகோதரி அம்மு கொடுத்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜெயப்பிரகாஷ், தனது தற்கொலைக்கான காரணத்தை ஆடியோவில் பதிவு செய்து நெருங்கிய உறவினா்களுக்கு அனுப்பிய தகவல் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

வேலூரில் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா், பெயிண்டா். இவரது மனைவி கவ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

அதிமுக வாட்ஸ்ஆஃப் குழு அறிமுகம்

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் செய்திகள், தகவல்களை உடனுக்குடன் அறியும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் தொண்டா்கள், பொதுமக்கள் ஸ்கேன் மூலம் இணைய புதிய க்யூ ஆ... மேலும் பார்க்க

சாலை அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்பல்லி கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

வேலூா் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி. 7-ஆம் வகுப்பு படிக்கிறாா்.... மேலும் பார்க்க

150 குடும்பங்களுக்கு வஃக்ப் வாரியம் நோட்டீஸ்: கோட்டாட்சியா் தலைமையில் குழு விசாரணை

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வஃக்ப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூா் வருவாய்... மேலும் பார்க்க