ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! ந...
சாலை அமைக்க பூமி பூஜை
குடியாத்தம் ஒன்றியம், பரதராமி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்பல்லி கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் தியாகராஜன், திமுக நிா்வாகிகள் மகாலிங்கம், ரமேஷ், ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.