செய்திகள் :

கார் 4 கோடி; நம்பர் 46 லட்சம் - கேரளாவை அசரவைத்த CEO; பின்னணி என்ன?

post image

லிட்மஸ் சிஸ்டம்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் வேணு கோபாலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர்.

சமீபத்தில் இவர், கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நம்பர் பிளேட்டை வாங்கியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார்.

Lamborghini Urus Performante
Lamborghini Urus Performante

‘KL 07 DG 0007’ என்ற கவர்ச்சியான நம்பரை மோட்டார் வாகனத்துறை (MVD) நடத்திய ஆன்லைன் ஏலத்தில் வாங்கியுள்ளார். இதற்கு அவர் கொடுத்த விலை 45.99 லட்சம் ரூபாய்.

இந்த நம்பர் பிளேட்டை அவரது ஆடம்பரமான லம்போர்கினி உரஸ் பெர்ஃபார்மண்டே (Lamborghini Urus Performante) என்ற 4 கோடி மதிப்புமிக்க காரில் பொருத்தியுள்ளார்.

போபாலகிருஷ்ணன் அவரது ஆடம்பரமான பர்சேஸ் குறித்து இன்ஸ்டாகிராமில், "காத்திருப்பு முடிந்தது! எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர் லம்போர்கினி உரஸ் பெர்ஃபார்மண்டை சந்தியுங்கள், இது ஏற்கெனவே இதன் நம்பர் பிளேட்டுக்காக, கேரளாவின் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான வாகன எண்ணான 'KL 07 DG 0007' என்ற சாதனை எண்ணுக்காக இது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது." எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே தனது கலெக்‌ஷனில் உள்ள லம்போர்கினி ஹுராகான் ஸ்டெராடோ மற்றும் BMW M1000 XR பைக் உள்ளிட்ட பிற உயர் ரக வாகனங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் கோபாலகிருஷ்ணன்.

0007 என்ற எண்ணுக்கான ஏலம் 25,000ல் தொடங்கியது. இதில் 5 பேர் கலந்துகொண்டனர். போட்டி மிகவும் கடுமையானதாக சென்று இரண்டு நபர்கள் மோதிக்கொண்டனர்.

இறுதியில், முந்தைய சாதனையான ரூ.44.84 லட்சத்தைத் தாண்டி கோபாலகிருஷ்ணன், 45.99 லட்சம் ரூபாய் ஏலம் கேட்டார்.

இதே ஏலத்தில்  'KL 07 DG 0001' என்ற எண் 25.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த ஏலம் மாநில அரசின் முயற்சியில் நடைபெற்று வருகிறது. கவர்ச்சியான எண்களை ஆறு வகையாக பிரித்து 3000 முதல் 1 லட்சம் வரை ஆரம்ப விலையில் ஏலம் நடத்தப்படுகிறது.

தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது. மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையான... மேலும் பார்க்க

Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" - அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச்... மேலும் பார்க்க

`போலி பனீர்' ஷாருக்கான் மனைவி நடத்தும் உணவகத்தில் கலப்படம்? -யூடியூபர் புகார்; கெளரி கான் விளக்கம்

மும்பையில் பிரபலங்கள் நடத்தும் ரெஸ்டாரண்ட்மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ... மேலும் பார்க்க

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட... மேலும் பார்க்க

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்; குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய யானைகள் | Viral video

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகரில் நேற்று (ஏப்ரல் 14) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, 5.2 ரிக்டர் அளவில் ஜூலியனுக்கு தெற்கே... மேலும் பார்க்க

Resignation: "இப்படித்தான் நடத்தப்பட்டேன்" - கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய ஊழியர்!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், ஊழியர் ஒருவரின் கடுமையான ஆனால் வினோதமான ராஜினாமா கடிதத்தை லின்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல இழிவாக நடத்தப்பட்டதாகவும், குறைத்து ... மேலும் பார்க்க