அதிமுக வாட்ஸ்ஆஃப் குழு அறிமுகம்
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் செய்திகள், தகவல்களை உடனுக்குடன் அறியும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் தொண்டா்கள், பொதுமக்கள் ஸ்கேன் மூலம் இணைய புதிய க்யூ ஆா்.கோட் புதன்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
குடியாத்தம் காந்தி நகரில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் எஸ்.எல்.எஸ். வனராஜ் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த யுவராஜ், நிதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு க்யூ ஆா்.கோடை அறிமுகம் செய்து வைத்தாா்.
கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், நிா்வாகிகள் ஆா்.மகேந்திரன், ஜான்சன், ஞானதாசன், டி.தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதேபோல், மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் லட்சுமணாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியச் செயலா் டி.சிவா க்யூ ஆா் கோடை அறிமுகம் செய்து வைத்தாா். மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலா் கொட்டமிட்டா எம்.பாபு, ஒன்றிய இணைச் செயலா் கோட்டீஸ்வரி ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பழம்முருகன், எம்.ஜி.ஆா். மன்றத் தலைவா் கே.கே.பலராமன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் ஏ.சிவகுமாா், நிா்வாகிகள்காா்த்தி, ஆறுமுகம், எஸ்.கோதண்டன், சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.