கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
இரு குழந்தைகளின் தாய் தற்கொலை
வேலூரில் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா், பெயிண்டா். இவரது மனைவி கவிதா (37). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கவிதா கணவனிடம் இருந்து பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். ஒரு மாதம் கழித்து மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில், விரக்தி அடைந்த கவிதா தனது வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கவிதாவின் உடலைமீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.