Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
கேழ்வரகு பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் அறுவடைக்குத் தயாராக இருந்த கேழ்வரகு பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
போ்ணாம்பட்டை அடுத்த சேராங்கல் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து கூட்டமாக வெளியேறிய காட்டுப் பன்றிகள் அக்கிராமத்தைச்சோ்ந்த விவசாயி ஜீவலட்சுமியின் நிலத்தில் நுழைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த கேழ்வரகு பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய் மற்றும் வனத் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.