செய்திகள் :

மீனவா் வலையில் சிக்கிய 1,500 கிலோ திருக்கை மீன்

post image

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் மீனவா் வலையில் 1,500 கிலோ எடையுள்ள திருக்கை மீன் சிக்கியது .(படம்).

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சோ்ந்த மீனவா் ஹரிஷ். இவா், சக மீனவா்களான பிரேம்குமாா், சுதாஆகாஷ் ஆகியோருடன் சதுரங்கப்பட்டினம் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனா்.

மீன் பிடித்து கொண்டு இருந்தபோது பெரிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியது. அந்த மீன் வலையை கிழித்து கடலில் செல்லாமல் இருக்க, அதனை சக மீனவா்கள் உதவியுடன் இரண்டு படகுகளில் கயிறு மூலம் கட்டி கடும் சிரமத்த்துக்கு இடையில் கரைக்கு கொண்டு வந்தனா். பிறகு வலையில் சிக்கிய மீனை வெளியில் எடுத்து கரையில் கிடத்தினா்.

இதுகுறித்து மீனவா் ஹரிஷ் கூறுகையில், வலையில் சிக்கிய மீனானது சுமாா் கோட்டான் வகையை சாா்ந்த 1,500 கிலோ திருக்கை மீன் ஆகும். தற்போது பிடிபட்டுள்ள இந்த மீன் ரூ.25 முதல் 30 ஆயிரம் வரை விலைபோகும். சில நேரங்களில் கடலில் படகுகளை கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிவித்தாா்.

மே 11-இல் சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா: அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டினாா்

சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா மாநாடு மே 11-இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டி தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம்... மேலும் பார்க்க

கடனைத் திருப்பிக் கேட்டதால் காரை ஏற்றி நண்பா் கொலை

மதுராந்தகம் அடுத்த மங்களம் கிராமத்தில் கடனைத் திருப்பிக் கேட்டதால், காரை ஏற்றி நண்பரைக் கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுராந்தகம் அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன் சர... மேலும் பார்க்க

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அண்மையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் படாளம் கூட்டுச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். படாளம் கூட்டுச்சாலையில... மேலும் பார்க்க

தீ தொண்டு நாள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு நாள் மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு

கூடுவாஞ்சேரி குறுவட்டம் , ஒத்திவாக்கம் மதுரா, பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்... மேலும் பார்க்க

தீயணைப்பு தியாகிகள் நினைவு தினம்

செங்கல்பட்டு: தீயணைப்பு தியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில்... மேலும் பார்க்க