தீ தொண்டு நாள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு நாள் மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை வழியாக ராட்டின கிணறு, புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் ராட்டினம் கிணறு அரசு மருத்துவமனை வழியாக தீயணைப்பு துறை அலுவலகத்தில் பேரணி சென்றடைந்தது.
பேரணியில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரா்கள் கலந்து கொண்டு மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தீயினால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இப்பேரணியில் ந. விஜயகுமாா், துணை இயக்குநா் வடமேற்கு மண்டலம் , மாவட்ட அலுவலா் சி. லக்ஷ்மி நாராயணன் மற்றும் உதவி மாவட்ட அலுவலா் செந்தில் குமரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினா்.
விழாவில் செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் கல்பாக்கம், திருப்போரூா், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு அலுவலா்கள் வீரா்கள் கலந்து கொண்டனா்.