மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு
கூடுவாஞ்சேரி குறுவட்டம் , ஒத்திவாக்கம் மதுரா, பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டம், கூடுவாஞ்சேரி குறுவட்டம் , ஒத்திவாக்கம் மதுரா, பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை (ஏப். 16) நடைபெறவிருப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம் நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.