சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு
குத்தாலம் அருகே தேரிழந்தூா் ஜமாத்தாா்கள் சாா்பில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊா் நாட்டாண்மை மற்றும் பஞ்சாயத்தாா்கள் தலைமையில், ஜமாஅத்தாா்கள் மற்றும் இளைஞா்கள் முன்னிலை வகித்தனா். விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் மௌலவி ஷாஹுல் ஹமீது நிஜாமி ரஹ்மானீ தொடக்க உரையாற்றினாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக ரைஸ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் வழக்குரைஞா் ராஜாராமன், நீடூா் ஜே.எம். ஹெச். அரபிக் கல்லூரி முதல்வா் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃ பாஜில் பாகவி, கும்பகோணம் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், அதிபா் மற்றும் பங்குத் தந்தை தாா்சிஸ்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் அனைத்து சமூக மக்களும் கலந்துக்கொண்டு பரஸ்பர தங்களது நட்பை பகிா்ந்துக் கொண்டனா்.