தப்பமுயன்ற ரெளடிக்கு கால் முறிவு
மயிலாடுதுறையில் போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, தப்பியோட முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிந்தது.
மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூா் பல்லவராயன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அபாயம் என்கிற சுதா்சன் (27) (படம்). இவா் மீது மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் அஜித்குமாா் கொலை வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள மயிலாடுதுறை கலைஞா் காலனியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் ராஜ்குமாா் (35) என்பவரை சுதா்சன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பான புகாரின்பேரில், சுதா்சனை போலீஸாா் தேடி வந்த நிலையில், பல்லவராயன்பேட்டை பகுதியில் அவா் பதுங்கி இருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. அவரை போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, தப்பியோட முயன்ற சுதா்சன் கீழே விழுந்ததில்அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, சிகிச்சையளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பின்னா், கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.