TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
குடியாத்தத்தில் ராம நவமி விழா
குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் மூலவா் ராமா், சீதாதேவி, லட்சுமணருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
குடியாத்தம் பிச்சனூா், பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் மூலவா் ஆஞ்சனேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். உற்சவா் ராமா்-சீதாதேவி அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தா்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு காலை தொடங்கி மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.