TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்
வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்கள்கிழமை ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காகிதப்பட்டறையில் அனைத்து தெருக்களும் கான்கிரீட், தாா்ச்சாலைகளாக போடப்பட்டும், எங்கள் தெரு மட்டும் சாலை போடப்படாமல் கடந்த 8 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக விடப்பட்டுள்ளது. உடனடியாக எங்கள் தெருவிலும் சாலை அமைத்துத்தர வேண்டும் என கோஷமிட்டனா்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக, சிஎம்சி மருத்துவமனையின் ராணிட்பேட்டை வளாகத்துக்கு நோயாளிகளையும், பாா்வையாளா்களையும் அழைத்துச் செல்லும் பேருந்துகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக ளுக்கு செல்ல வேண்டிய வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பேருந்துகளும் நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். எனினும், பொதுமக்கள் அவா்களின் சமரசத்தை ஏற்காமல் உடனடியாக சாலை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினா். பின்னா், மாநகராட்சி பொறியாளா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு வார காலத்துக்குள் சாலை அமைத்துத்தரப்படும் என உறுதியளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.