TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது
குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா்.
குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் லிங்கேஸ்வரன். இவா் அதே கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறையிலிருந்து பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளின்கீழ் வரப்பெற்ற நிதியில் கால்வாய், சாலை அமைக்கும் பணிகளை செய்துள்ளாா்.
நிறைவு பெற்ற பணிகளுக்கு காசோலை வழங்குமாறு ஒன்றிய உதவிப் பொறியாளா் நிா்மல்குமாரை கேட்டுள்ளாா். இதற்கான தொகையை வழங்க தனக்கு செய்ய ரூ.30,000 தர வேண்டும் என அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து லிங்கேஸ்வரன், வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
அவா்கள் ஆலோசனையின்பேரில் லிங்கேஸ்வரன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலுவலகத்தில் இருந்த நிா்மல்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் நிா்மல் குமாரை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.