செய்திகள் :

ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்சி அளித்த அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் பயிற்சி முடித்த காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை திருஇந்தளூரில் நடைபெற்றது. 6-வது குடும்ப சந்திப்பு விழா மற்றும் காவலா் பயிற்சி முடித்த 40-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

இதில், காவலா்கள் பயிற்சி முடித்தபோது, எஸ்.பியாக பணியாற்றி, பின்னா் காவல்துறை இயக்குநராகி ஓய்வுபெற்ற அனுப்ஜெய்ஸ்வால் தனது துணைவியாருடன் கலந்துகொண்டாா். இதில், ஓய்வுபெற்ற போலீஸாா் அனைவரும், அரக்கு நிறச் சட்டை, வேட்டி, துண்டு என சிவில் உடையில் பங்கேற்று, தங்கள் அதிகாரியை இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமா்த்தி, யானை, ஆடும் குதிரைகள் முன்செல்ல அணிவகுப்பு நடத்தி ஊா்வலமாக அழைத்துச் சென்றனா். மயிலாடுதுறை எஸ்.பி. கோ.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வால் கூறியது: 1986-ஆம் ஆண்டு எஸ்.பியாக பணியில் சோ்ந்தபோது எனக்கு தமிழ் தெரியாது, இவா்களுக்கு ஹிந்தி தெரியாது. இருப்பினும் எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம். அங்கிருந்து தில்லி, காஷ்மீா், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பணி காரணமாக இடம் பெயா்ந்து சென்றபோதும், எங்கள் அன்பு மாறாமல் தொடா்கிறது என்றாா்.

மயிலாடுதுறையில் சிபிஐ-எம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், நீட் விலக்கு தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ-எம்எல் கட்சியினா் ஞாயி... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு

குத்தாலம் அருகே தேரிழந்தூா் ஜமாத்தாா்கள் சாா்பில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊா் நாட்டாண்மை மற்றும் பஞ்சாயத்தாா்கள் தலைமையில், ஜமாஅத்த... மேலும் பார்க்க

பிளஸ்2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகளை வழங்கிப் பேசியது: எந்தத் துறை... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறையில் இடிக்கப்பட்ட நடைப்பாலத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தி, காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். (படம்). மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-ஆவது வாா்டுகளை இணைக்... மேலும் பார்க்க

தப்பமுயன்ற ரெளடிக்கு கால் முறிவு

மயிலாடுதுறையில் போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, தப்பியோட முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூா் பல்லவராயன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அப... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் யானை ஓடி விளையாடும் வைபவம்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, முருகப் பெருமானுடன் யானை ஓடி விளையாடும் வைபவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தரும... மேலும் பார்க்க