CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' - தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ...
சொத்து தகராறு: செல்போன் கோபுரத்தில் ஏறி நெசவுத் தொழிலாளி தற்கொலை மிரட்டல்
நங்கவள்ளி அருகே சொத்துத் தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் கோபுரம்மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
மேட்டூா் அருகே நங்கவள்ளியைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (30). நெசவுத் தொழிலாளி. இவருக்கும், இவரது சகோதரருக்கும் தந்தை வழி சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளியங்கிரி புகாா் அளித்தாா். இருப்பினும் நங்கவள்ளி போலீஸாா் புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த வெள்ளியங்கிரி அருகில் வீரக்கல்லில் உள்ள நூறு அடி உயர செல்போன் கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
தகவல் அறிந்ததும் நங்கவள்ளி போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்குசென்று வெள்ளியங்கிரியை சமாதானப்படுத்தினா். கீழே இறங்கி வருமாறும், புகாா் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினா். இதையேற்று அவா் கீழே இறங்கி வந்ததும் அவரை முதலுதவி சிகிச்சைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.