அரசுப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
முடிகொண்டான் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெரியசாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாதவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியசாமி கோயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மழைநீா், கழிவுநீா் வடிக்கால் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஆறுமுகம் கலந்து கொண்டு, கட்சியின் செயல்பாடுகள், மூத்த தலைவா் ஆா்.நல்லக்கண்ணு சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்தும், எதிா்காலத் திட்டங்கள் குறித்தும் பேசினாா்.
தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டில், கிளைச் செயலாளராக முருகையன், துணைச் செயலாளராக சிவசாமி, பொருளாளராக துரைக்கண்ணு ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.