முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை:...
நெல்லை அருகே விபத்தில் பலியான மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி அருகே விபத்தில் பலியான மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
மானூா் அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகள் கலைச்செல்வி (19). கல்லூரி மாணவியான இவா், கடந்த 1 ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்தாராம். பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இருப்பினும் அவரது கருவிழிகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினா் தாமாக முன்வந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா். இதையடுத்து கலைச்செல்வியின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கல்லூரி முதல்வா் ரேவதிபாலன், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.