மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் ஐக்கியம்
திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் பலா் இணைந்தனா்.
புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த பசுபதி பாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அவற்றிலிருந்து விலகி அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் பால் கண்ணன், சம்சு சுல்தான், முத்து பாண்டி, துறையூா் சேகா், பிரவீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.