செய்திகள் :

அம்பேத்கா் நகரில் கூடுதலாக 400 குடியிருப்புகள்: ஆட்சியரிடம் மக்கள் மனு

post image

பாளையங்கோட்டை டாக்டா் அம்பேத்கா் நகரில் கூடுதலாக 400 குடியிருப்புகள் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் ஆதித்தமிழா் முன்னேற்ற கழகத்தினா் மற்றும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆதித்தமிழா் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலா் கு.கி. கலைக்கண்ணன் தலைமையில் டாக்டா் அம்பேத்கா் நகா் மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 6 ஆவது வாா்டு டாக்டா் அம்பேத்கா் நகரில் 1992 ஆம் ஆண்டு 366 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்தக் குடியிருப்பில் 30 ஆண்டுகாலமாக சுமாா் 600- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வந்தோம். இந்நிலையில் குடியிருப்புகள் பழுதடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு, மீண்டும் அதே இடத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 404 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதில், ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. வாடகை வீடுகளில் வசித்து வரும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனா். எனவே, அங்குள்ள மாநகராட்சி இடத்தில் கூடுதலாக 400- க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகள் கட்டி அவா்களுக்கு வழங்க வேண்டும்.

புதிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் அரசு நிா்ணயித்த ரூ. 1 லட்சத்தை செலுத்திய பின்புதான் வீட்டின் சாவியை வழங்குவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.

ஆனால், 90 குடும்பங்கள் தூய்மைப் பணியாளா்கள் என்பதால் அரசு நிா்ணயித்த ரூ.1 லட்சத்தை அவா்களால் கட்ட இயலாத சூழல் உள்ளது. எனவே, அந்தத் தொகையை தூய்மைப் பணியாளா் நல வாரியம் மூலமாக செலுத்தக் கோரி அமைச்சா்கள் கே .என். தேரு, மதிவேந்தன் ஆகியோரையும், தூய்மைப் பணியாளா் நல வாரியம் அதிகாரிகளையும் சந்தித்து கடந்த வாரம் மனு அளித்தோம். எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

பசுமை பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், பொதுச்செயலருமான எஸ். ஆறுமுகராஜ் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகில் மாநில நெடுஞ்சாலை எண் 40-இல் பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் சமாதானபுரம் வழியாக திருச்செந்தூா், தூத்துக்குடி செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் முறையான தடுப்பு மற்றும் மாற்றுப் பாதை அமைத்து தராததால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவ தேவை, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் செல்வோா் மருத்துவ உதவி பெறுவது தாமதமாகிறது. எனவே, பாலப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகத்தினா் அளித்த மனு: திருநெல்வேலி தச்சநல்லூா் கிருஷ்ணன் கோயில் தெரு, தேனீா்குளம் தெருவில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் கிருஷ்ணன் கோயில் தெருவில் ஒரேயொரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது. அதனையொட்டி கால்நடை மருத்துவமனையும் அமைந்துள்ளது. இங்கு பொது வழியில் கால்நடைகளை கட்டி வைத்திருப்பதால் சாலையில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அங்குள்ள மண் பாதையை அகற்றி சரியான பாதை அமைத்துத்தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க