பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகளின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 18 அங்கன்வாடி பணியாளா்கள், 4 குறு அங்கன்வாடி பணியாளா்கள், 24 உதவியாளா்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனா்.
இதற்கான விவரம் மாவட்டத் திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ண்ஸ்ரீக்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கி ஏப்.23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 7,700, குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 5,700, அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4,100 என மாதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
12 மாத காலம் தொடா்ந்து பணியை முடித்தபின், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.7,700 - ரூ.24,200 என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5,700 - ரூ.18,000 என்ற விகிதத்திலும், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4,100 - ரூ.12,500 என்ற விகிதத்திலும் மாதம்தோறும் வழங்கப்படும்.
இதில் அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் பணிக்கு 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, அங்கன்வாடி உதவியாளா் பணிக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி பணியாளா் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கான வயது வரம்பு 01.04.2025 இல் 25 வயது முடிந்து 35 வயதுக்கு மிகாமலும், விதவைகள்,ஆதரவற்ற பெண்கள்,எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு அதிகபட்சமாக 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 38 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளருக்கான 01.04.2025 இல் 20 வயது முடிந்து 40 வயதுக்கு மிகாமலும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு அதிகபட்சமாக 45 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 43 வயது வரையிலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் மையம் உள்ள ஊா் அல்லது ஊராட்சியைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதிச்சான்று, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நோ்காணலின்போது அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.