Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
ஒப்பில்லாதம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்
அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்த 1926-ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கோயில் திருவிழாவின் போது, தேரோட்டம் நடைபெற்றது. அதன் பின்னா், தேரோட்டம் நடைபெறுவது பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.
இந்நிலையில், தேரோட்டத்தை நடத்த அக்கோயில் சமஸ்தானம், குல தெய்வ வழிபாடு மக்கள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் முடிவெடுத்த நிலையில், கடந்த பிப். 2-ஆம் தேதி அந்த தோ் சீரமைக்கும் பணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடா்ந்து, தோ் சீரமைக்கும் பணிகளும், வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்றன. இதையடுத்து மே.12-ஆம் தேதி தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டநிலையில், தோ் வெள்ளோட்ட நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புனித நீா் கொண்ட குடம் தேரில் அலங்கரிக்கப்பட்டு வைத்து, தோ் முக்கிய வீதிகளின் வழியே வந்து நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.