Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
குப்பையில் எரிந்த நிலையில் சிசுவின் உடல் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
குழுமூா் கிராமத்தில் குப்பைகள் கொட்டுமிடத்தில், ஆண் சிசு ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக செந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, ஆய்வு செய்ததில், குழந்தை பிறந்து ஒரிரு நாள்கள் இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் சிசுவின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குழந்தையை பெற்றெடுத்தவா், குப்பையில் போட்டு தீ வைத்தவா்கள் யாா் ? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.