திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது.
விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக மஞ்சள் நூறு கிலோ ரூ.14,671 முதல் ரூ.17,596 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் ரூ.13,983 முதல் ரூ.15,388 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் ரூ. 23,737 முதல் ரூ. 28,399 வரையிலும் விற்கப்பட்டது. மொத்தம் 4165 மூட்டை மஞ்சள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது.