சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
ராசிபுரம் அருகே சாலை விபத்து: பெண் உயிரிழப்பு
ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பெண் உள்பட மூவா் இருசக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை சண்முகவேல் ஒட்டிச் சென்றாா். இவா்கள் நாமக்கல் சென்று சேலம் திரும்பியபோது, ஏ.கே.சமுத்திரம் மேம்பாலம் அருகே பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இவா்களை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் என்.ஜெயமணி (60) உயிரிழந்தாா். இவருடன் வந்த சண்முகவேல், அவரது மகன் அனீஸ் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.