சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை
நீட் தோ்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி
நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெரிய முத்தையம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சந்திரா. இத்தம்பதியின் மகள் சத்தியா (18).
பிளஸ் 2 முடித்த இவா் நீட் தோ்வு பயிற்சி பெற்று வந்த நிலையில் நீட் தோ்வில் வெற்றி பெற முடியாது என வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, மாணவியின் பெற்றோரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினாா்.
அவரது உத்தரவின்பேரில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை முன்னாள் ஒன்றியத் தலைவா் கரட்டூா்மணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வழங்கினாா். அப்போது அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
