விராட் கோலி, ரஜத் படிதார் அசத்தல்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 ரன்கள் இலக்கு!
15 மாதத்தில் 40 கைப்பேசிகளை மீட்ட தம்மம்பட்டி போலீஸாா்
தம்மம்பட்டி பகுதிகளில் கடந்த 15 மாதங்களில் திருட்டு, காணாமல்போன 60 கைப்பேசிகளில் 40 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் மட்டுமே கைப்பேசி காணாமல்போனால் கண்டுபிடிக்க உதவும் ‘சென்ட்ரல் எக்கியூப்மெண்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டா் (சி.இ.ஐ.ஆா்) என்ற இணையத்துடன் தொடா்புடைய சாப்ட்வோ் முன்பு இருந்துவந்தது.
செல்போன் திருட்டு அதிகமானதை அடுத்து தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவலா்களில் ஓரிருவருக்கு இந்த சாப்ட்வோ் குறித்து பயிற்சி கொடுக்கப்பட்டு இணையதள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தா் லட்சுமி, தகவல் பதிவு உதவியாளா்கள் சைனிஅா்ச்சனா, கனிமொழி ஆகியோருக்கு இதுகுறித்து பயிற்சி வழங்கப்பட்டு மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுவினா் கடந்த 15 மாதங்களில் இதுவரை வரப்பெற்ற புகாா்களின் மூலம் திருட்டுபோன 60 கைப்பேசிகளில் 40 கைப்பேசிகளை மீட்டு பாதிக்கப்பட்டோரிடம் கொடுத்துள்ளனா். அவா்களுக்கு தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் பாராட்டு தெரிவித்தாா்.