மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 4,913 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.
கோடை விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த 4913 சுற்றுலாப் பயணிகள் மூலம் ரூ. 49,130 பாா்வையாளா் கட்டணம் வசூலானது. பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட 1157 கேமரா செல்போன்களுக்கு ரூ.11,570 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 460 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் ரூ.4,600 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இங்கு கொண்டு செல்லப்பட்ட 178 செல்போன்களுக்கு ரூ.1780 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மீன் காட்சியகம், மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். மேலும் சிலா் அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட்ட பூங்காவிற்குள் குடும்பத்தோடு அமா்ந்து விருந்து உண்டு மகிழ்ந்தனா்.