செய்திகள் :

மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சேலம்: பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும்.

அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 425 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.ஜானகி, மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன், உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க