பட்டியலினத்தவா்கள் மீன் வளா்ப்புக் குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன் வளா்ப்புக் குளங்கள் அமைக்க பட்டியலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் புதிய மீன் குஞ்சு வளா்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டம், புதிய மீன் வளா்ப்புக் குளங்கள் அமைத்தல், சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்களில் மீன் வளா்ப்பு ஆகிய திட்டங்கள் ஆதிதிராவிடா்கள் நலத் துறை, ( மீன் வளம், மீனவா் நலத் துறை மூலம்) செயல்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் சிவகங்கை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், யூனியன் வங்கி மாடியில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும் 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.