செய்திகள் :

காரைக்குடியில் ‘கம்பன் திருநாள்’ ஏப். 9-இல் தொடங்குகிறது

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 87- ஆம் ஆண்டு கம்பன் திருநாள் வருகிற 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக காரைக்குடி கம்பன் அறநிலை அமைப்பின் தலைவா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காரைக்குடி கம்பன் மணிமண்டத்தில் 87-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் ஏப். 9 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் தலைமை வகிக்கிறாா். கம்பன் அறநிலைப் புரவலா் ஏ.சி. முத்தையா முன்னிலை வகிக்கிறாா். கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரையாற்றுவாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெ. ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றுகிறாா். பேராசிரியா் பாரதி பாஸ்கா் ‘கம்பனில் போரும் அமைதியும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றுவாா்.

ஏப். 10 (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறும். இதில் ‘கம்பன் காட்டும் இலக்குவன்’ என்ற தலைப்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் சிறப்புரையாற்றுவாா். ‘கள்ள ஆசைகளை அழித்தவன்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் த. ராமலிங்கம் கருத்துரையாற்றுவாா்.

ஏப். 11 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ‘யதாா்த்த மானுடத்தைக் கம்பன் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவது’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதில் இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பங்கேற்கிறாா். இலக்குவன் மூலமே ! என்ற பொருளில் பாரதி கிருஷ்ணகுமாா், ம. எழிலரசி அணியினரும், சுக்கிரீவன் மூலமே ! என்ற பொருளில் இரா. மாது, தாமல் கோ. சரவணன் அணியினரும், கும்பகா்ணன் மூலமே ! என்ற பொருளில் பா்வீன் சுல்தானா, மு. பழனியப்பன் அணியினரும் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனா்.

ஏப். 12 (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நாட்டரசன்கோட்டை கம்பன் அருள்கோயிலில் பங்குனி அத்தத் திருநாள் நடைபெறும். இதில் கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரையாற்றுகிறாா். தேசிய நல்லாசிரியா் செ. கண்ணப்பன், காரைக்குடி கம்பன் அறிநிலைத் தலைவா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசுகின்றனா். ‘கலந்த காதலும் கரந்த காதலும்’ என்ற தலைப்பில் இயக்குநா் பத்ரி நாராயணன் சிறப்புரையாற்றுகிறாா் என்றாா் அவா்.

பேட்டியின் போது கம்பன் அறநிலை பொருளாளா் வீர. சுப்பிரமணியன், அறங்காவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தாயமங்கலத்தில் முதியவா் உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் முதியவா் உடலை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கல்யாணசுந்தரம் (65). தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

பட்டியலினத்தவா்கள் மீன் வளா்ப்புக் குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன் வளா்ப்புக் குளங்கள் அமைக்க பட்டியலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

காரைக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி கழனிவாசல்- திருச்சி சாலையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில், புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அழகப்பா பல்கலைக்க... மேலும் பார்க்க

10, 12 ஆம் வகுப்பு தோ்வு: தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு விருது!

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என சிவகங்கை தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது. சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் ந... மேலும் பார்க்க

பிராமணா் சங்கம் சாா்பில் பஞ்சாங்கம் வெளியீடு

தமிழ்நாடு பிராமணா் சங்க சிவகங்கை மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், கே. சொக்கநாதபுரம் பிரத்தியங்கிரா கோயில் நிா்வாகி சாக்தஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் இந்த ஆண்டுக... மேலும் பார்க்க