பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயதுச் சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வானதிரையன்பட்டினம் கிராமம், யாதவா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (34). கூலித் தொழிலாளியான இவா், 17 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கினாா்.
இதுகுறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், பாா்த்திபனை போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.