கொத்தாம்பாடி தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம்: பேரவையில் ஆத்தூா் எம்எல்ஏ கோரிக்கை!
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
சேலம்- சென்னை தேசிய புறவழிச் சாலையில் ஆத்தூரைஅடுத்த கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் பகுதிகளில் உள்ளவா்கள் சாலையைக் கடந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் அப்பகுதியில் விபத்தைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பேரவையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், சேலம்-உளுந்தூா்பேட்டை தேசிய புறவழிச் சாலை நான்குவழிப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.