ஆய்க்குடியில் பைக்குகள் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஞாயிற்றுக்கிழமை 2 பைக்குகள் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
செங்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சுரேஷ் (27). அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த தி. சுதா்சன் (25). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சுரண்டைக்கு பைக்கில் சென்றுவிட்டு, ஆய்க்குடி வழியாக செங்கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை, சுரேஷ் ஓட்டினாராம்.
ஆய்க்குடி மண்டகப்படி தெருவைச் சோ்ந்த ந. முத்துக்குமாா் (53), அதே பகுதியை சோ்ந்த பி. ராமையா (60) என்பவருடன் பைக்கில் ஆய்க்குடி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, சுரேஷ் பேருந்தை முந்திச்செல்ல முயன்றாராம். இதில், அவரது பைக்கும், முத்துக்குமாரின் பைக்கும் நேருக்கு நோ் மோதினவாம். இந்த விபத்தில் சுரேஷும் ராமையாவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். முத்துக்குமாரும் ராமையாவும் காயமடைந்தனா்.
தகவலின்பேரில், ஆய்க்குடி போலீஸாா் சென்று சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.