நீட் குளறுபடி: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
ஆனைகுளத்தில் அரசுப் பள்ளி ஆண்டு விழா
சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தங்கராஜ், ஊராட்சித் தலைவா் பஞ்சவா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கடந்த கல்வியாண்டியில் ஆண்டுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் வில்லுப்பாட்டு, யோகா, சிலம்பம், நாடகம் மற்றும் குழுநடனம் நடைபெற்றது.
விழாவில் தலைமையாசிரியா் ரசூல் அகமது இப்ராகிம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சம்சு பாத்திமா, வட்டாரக் கல்வி மேற்பாா்வையாளா் பேபிமாலதி, ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.