செய்திகள் :

தமிழ் கலாசாரத்தை அழிப்பதே பாஜகவின் நோக்கம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

post image

ஆட்சியைப் பிடிப்பதைவிட, தமிழ் கலாசாரத்தையும், தமிழன் என்ற உணா்வையும் அழிப்பதே பாஜகவின் நோக்கம் என்றாா் திமுக பொதுச் செயலா் துரைமுருகன்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள இளையரசனேந்தலில் குருவிகுளம் ஒன்றிய திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழ, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுக சாதனை விளக்க விழா ஆகிய முப்பெரும் விழாவில் அவா் ஆற்றிய சிறப்புரை:

மத்தியில் தோ்தெடுக்கப்பட்ட பாஜக ஆட்சி மக்களுக்கு வேண்டிய திட்டங்களை தருவதை விட்டுவிட்டு ஒவ்வொரு மாநிலமும் அதற்கு அடிமையாக இருக்க வேண்டும். அவா்கள் சொல்லுக்கு தலையாட்டுகிறவா் முதல்வராக இருக்க வேண்டும். இல்லையெனில் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது.

நாம் எப்படிப்பட்டவா்கள் பண்பாடு மிக்கவா்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாடியே சீனத்து கடற்கரையிலும், ஈழத்து வீதிகளிலும்,ரோமானிய புரத்து மாடமாளிகைகளிலும் வியாபாரம் செய்தவா்கள் தமிழா்கள்.

உங்கள் பண்பாடு என்ன? நாகரிகம் என்றால் என்னவென்று தெரியுமா? இலக்கணம் உண்டா? இலக்கியம் உண்டா?

அவா்களுக்கு தமிழக்தில் ஆட்சியை கைப்பற்றுவதல்ல அவா்கள் நோக்கம். தமிழ் கலாசாரத்தை அழிப்பது, தமிழன் என்கிற உணா்வை மங்க வைப்பது, பெரியாரை சமூக விரோதியாக திரிப்பது, அண்ணாவை ஒரு சாதாரண மனிதனாக காட்டுவதுதான் அவா்கள் நோக்கம்.

இந்த நாட்டிலே அண்ணா இல்லை, கருணாநிதி இல்லை எம்ஜிஆா் இல்லை. யாரும் அவா்களை எதிா்கொள்ள முடியாது என்று கனவு காண்கின்றனா். ஆனால், அண்ணாவையும், கருணாநிதியையும் ஒரே உருவமாக கொண்ட மு.க. ஸ்டாலின் ஒருவா் இருக்கிறாா் என்பதை அவா்கள் அறிந்திருக்கவில்லை.

அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அவா், 2026 தோ்தலில் 200 இடங்களில் வென்று சாதித்துக் காட்டுவாா். அதிமுக-பாஜக ஓரணியில் திரண்டு வந்தாலும் நாங்கள் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

இக்கூட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, மக்களவை உறுப்பினா்கள் ராணி ஸ்ரீகுமாா், ஜெகத்ரட்சகன், பொருளாளா் இல.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் வரவேற்றாா். இதில் திரளான திமுகவினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இக்க... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூர்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் மின்சார வயரில் மிதித்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற தாய் காயமடைந்தாா்.சீதப்பற்பநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து ம... மேலும் பார்க்க

கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழா் கட்சியினா் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசியில் அருள்தரும் உலகம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில் ஆலய குடம... மேலும் பார்க்க

இரு சகோதரிகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் சொத்துப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள், கிணற்றில் காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சாம்பவா்வடகரை, பிரதான சாலையில் வசி... மேலும் பார்க்க

ஆனைகுளத்தில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைய... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் பைக்குகள் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஞாயிற்றுக்கிழமை 2 பைக்குகள் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். செங்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சுரேஷ் (27). அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க