Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
சீதபற்பநல்லூர்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் மின்சார வயரில் மிதித்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற தாய் காயமடைந்தாா்.
சீதப்பற்பநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் மாதேஷ்(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தனது தாய் ரஞ்சிதாவுடன் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது கோயில் திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த மின்வயா் அருந்து கிடந்ததை கவனிக்காமல் அதன்மீது மாதேஷ் மிதித்துவிட்டாராம். இதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்து துடித்தபோது, ரஞ்சிதா காப்பாற்ற முயன்றுள்ளாா். அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில்காயம் அடைந்தாா்.
இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் மாதேஷ் உயிரிழந்தாா். ரஞ்சிதா சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, சீதபற்பநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.