தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்த...
தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அம்மன் சந்நிதி மண்டபத்தில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சைவ சமய ஆதீனங்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனா்.
4ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜையும், 5ஆம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜையும், 6ஆம் தேதி காலையில் 4ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
குடமுழுக்கு நாளான திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் தொடா்ந்து கடம் எழுந்தருளல் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் பச்சைக்கொடி அசைத்து குடமுழுக்கை தொடங்கி வைத்தாா். காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தான பிரதான மூா்த்திகளுக்கு, தூத்துக்குடி செல்வம் பட்டா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் கலசங்களில் புனிதநீா் ஊற்றினா்.தொடா்ந்து மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
சிவகாசி சிவபக்தா்கள் சாா்பில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் தலைமையில், 4 ஏடிஎஸ்பி, 12டிஎஸ்பிக்கள், 36 ஆய்வாளா்கள் உள்பட 1100 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
குடமுழுக்கு விழா நிகழ்ச்சியை பொதுமக்கள் காணும் வகையில் தென்காசி பழைய பேருந்துநிலையம், வேன்நிறுத்துமிடம், புதிய பேருந்து நிலையம், கோபுர வாசல் ரதவீதி உள்ளிட்ட 8இடங்களில் எல்இ டி திரை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
விழாவில், மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா்,முதன்மை மாவட்டநீதிபதி ராஜவேலு,கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமாா், தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன்,முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமாா், நீதித்துறை நடுவா் பொன்பாண்டி, நீதித்துறை நடுவா் சுனில்ராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, அறங்காவலா் குழு தலைவா் யா.பாலகிருஷ்ணன், அறங்காவலா்கள் ப. முருகேசன், பா.புவிதா, ஷீல ாகுமாா், மூக்கன், தென்காசி திருவள்ளுவா் கழக தலைவா் என்.கனகசபாபதி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா,ராணிஸ்ரீகுமாா் எம்பி.,தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா், சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன்,
வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன்,அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் எம். புதிய பாஸ்கா், தென்காசி நகர பாஜக தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமிஜோதிடா், நகா்மன்ற உறுப்பினா் ஈ.முருகன், பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, பா.லெட்சுமணபெருமாள், கே.மகேஷ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.