சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
இரு சகோதரிகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் சொத்துப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள், கிணற்றில் காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சாம்பவா்வடகரை, பிரதான சாலையில் வசித்துவரும் சகோதரா்கள் வைத்திலிங்கம் (63), பரமசிவம் (55). சுரண்டையைச் சோ்ந்த சகோதரிகளான சரோஜா (60), இந்திரா (50) ஆகியோரை இவா்கள் திருமணம் செய்திருந்தனா். சொத்தைப் பிரிப்பது தொடா்பாக இரு வீட்டினரிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இரு சகோதரிகளையும் காணவில்லையாம். அவா்களை உறவினா்கள் தேடி வந்தனா். அப்போது, ஊருக்குத் தெற்கே அவா்களுக்குச் சொந்தமான கிணற்றில் இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், சாம்பவா்வடகரை போலீஸாா் சென்று சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.