சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு போனஸ்
சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பங்குனிப் பொங்கலையொட்டி போனஸ் வழங்கப்பட்டது.
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கும், சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவுக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கடந்த 30- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பங்குனிப் பொங்கலுக்கு சிவகாசிப் பகுதியில் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டு விட்டது.