தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை
செய்யாறு அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி ( 35). இவரது மகன் நவீன்குமாா் (17) . இவா் செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாராம்.
இந்த நிலையில், நவீன்குமாா் சரிவர தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லவில்லையாம். அதனால் தாய் ஜெயலட்சுமி அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது. அதனால் மனமுடைந்த நவீன்குமாா், ஞாயிற்றுக்கிழமை வீட்டு மாடியில் தூக்கிட்டுக் கொண்டாா். இதுகுறித்து அறிந்த அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் நவீன்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.