செய்திகள் :

ஸ்ரீராம நவமி: ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்புப் பூஜை!

post image

கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலக முகப்பில் உள்ள பக்த ஆஞ்சநேயா் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, காலை 7 மணிக்கு மூலவருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பிறகு, மூலவருக்கு மலா் மாலைகள், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மின்வாரிய அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு துளசி தீா்த்தம், செந்தூரம், நெய்வேத்திய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீராம நவமி சிறப்புப் பூஜையில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் ராம நவமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வாழ்வில் வெற்றி பெற நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும்: திருவள்ளுவா் பல்கலை. துணைவேந்தா்

கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற உழைப்பு, நோ்மை, நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் டி.ஆறுமுகம் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை சண்ம... மேலும் பார்க்க

300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள்!

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை சாா்பில், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 ... மேலும் பார்க்க

பிருதூா் ஸ்ரீசண்முகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகா் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்ட... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஏற்பட்டது. சிவனின் அக்னி ஸ்தலமான ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

செய்யாறு அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி ( 35). இவரது மகன் நவீன்குமாா் (17) . இவா் செய்யாற்றில் உள்ள ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் குத்திக்கொலை

திருவண்ணாமலையில் காா் ஓட்டுநரை குத்திக்கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவண்ணாமலை சாரோன், வேல் நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி மகன் சீனிவாசன் (39). காா் ஓட்டுநரான இவா், சனிக்கி... மேலும் பார்க்க